2025 ஜனவரியில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்ஃபோன்கள்... லிஸ்ட் இதோ...!

ஜனவரி 2025இல் அறிமுகமாகும் சில சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்....





2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பல ஸ்மார்ட்போன்கள் களமிறங்க தயாராக உள்ளன. பல முக்கிய பிராண்டுகள் ஜனவரியில் தங்கள் சமீபத்திய மாடல்களை இந்தியாவிலும், உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சாம்சங் மற்றும் ரெட்மி முதல் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி வரை, ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இந்திய சந்தையில் தங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளன. ஜனவரி 2025இல் அறிமுகமாகும் சில சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.



சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ்: சாம்சங் தனது கேலக்ஸி சீரிஸ் எஸ்25ஐ ஜனவரியில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சாம்சங் இதை ஜனவரி 22, 2025 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அருமையான சீரிஸில் மூன்று மாடல்கள் இருக்கும். முதலாவது கேலக்ஸி S25, இரண்டாவது கேலக்ஸி S25+ மற்றும் மூன்றாவது கேலக்ஸி S25 அல்ட்ரா ஆகியவை ஆகும். வெளியீட்டிற்கு முன்னதாக, சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸின் வதந்தி பரவி வருகிறது. இந்த ஆண்டு, சாம்சங் தனது ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசசருடன் கூடிய கேலக்ஸி ஏஐ அம்சத்தையும் சேர்க்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஒன்பிளஸ் 13 சீரிஸ்: சந்தையில் ஒன் ப்ளஸின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மீண்டும் ஒன் பிளஸ் அதன் ஒன்பிளஸ் 13 சீரிஸ் மூலம் சந்தையில் களமிறங்க உள்ளது. இந்த அருமையான சீரிஸில் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13R ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒன்பிளஸ் 13 சீரிஸ் போன்களை மற்ற தயாரிப்புகளுடன் ஜனவரி 7ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது வெளியீட்டு நிகழ்ச்சியின்போது, ஒன்பிளஸ் ஆனது அதன் பிளாக்ஷிப் இயர்பட்களான ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




போக்கோ X7 சீரிஸ்: போக்கோ X7 சீரிஸானது ஜனவரி 7ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த அருமையான சீரிஸில் போக்கோ X7 5G மற்றும் போக்கோ X7 ப்ரோ 5G ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃபிரேஷ் ரெட் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் 6.67 இன்ச் 1.5K ரெசல்யூஷன் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன்களானது மீடியாடெக் டைமன்சிட்டி 7300-அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது.




ரெட்மி 14சி: ரெட்மி 14C ஆனது ரெட்மி 14R இன் வெர்ஷனாக இருக்கலாம் என்று வதந்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இது 600 நிட்கள் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃபிரேஷ் ரெட் மற்றும் 1640 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட பெரிய 6.88 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கக் கூடும். ரெட்மி 14C ஆனது 13MP ரியர் கேமரா மற்றும் செல்ஃபிகளுக்காக 5MP ஃபிரன்ட் கேமராவைக் கொண்டிருக்கக்கூடும். இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,160mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments