ரியல்மி 14 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 14 Pro Plus Specifications): மிட்-ரேஞ்ச் விலையில் பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) குவாட் கர்வ் டிஸ்பிளே (Quad Curve Display) டிஸ்பிளே வருகிறது. இந்த ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவில் 1.5K ரெசொலொஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஏஐ ஐ புரொடெக்சன் (AI Eye Protection) கிடைக்கிறது. வாட்டர்ப்ரூஃப் (Waterproof), ஷாக்ப்ரூஃப் (Shockproof) மற்றும் டஸ்ட்ப்ரூஃப் (Dustproof) கொடுக்க IP68, IP66 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ரக்கட் பாடியாகவே இருக்கிறது. இதுபோக ஒயிட் வேரியண்ட்டில் கலர்-சேஞ்சிங் பேக் கிடைக்கிறது. ஏஐ கிளாரிட்டி, எரைசர், ஸ்னாப் மோட் போன்ற பீச்சர்களை கொடுக்கும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (4nm Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட் பர்ஃபாமென்ஸ் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கேமிங் அவுட் வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்896) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்882) சென்சார் கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. கேமராவை போலவே டிரிபிள் ஃபிளாஷ் சப்போர்ட் வருகிறது. ஆகவே, நைட்போட்டோகிராபி பிரீமியாக அவுட்புட் கொடுக்கும்.
டெலிபோட்டோ கேமராவில் 6X சென்சார் ஜூமிங் செய்து கொள்ளலாம். டிஜிட்டலில் 120X சூப்பர் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. பெரிஸ்கோப் மற்றும் மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் உள்ளது. 12 ஜிபி ரேம் (14 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் உள்ளது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலும் ஆர்டருக்கு வர இருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் டூயல் வியூ வீடியோ சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் பெரிய 6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. பேர்ல் ஒயிட், சூடே கிரே மற்றும் பிகானெர் பர்பிள் ஆகிய மூன்று கலர்களில் வாங்கி கொள்ளாம். ஜனவரி 22ஆம் தேதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி , 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
0 Comments