ஜூம் செயலிக்கு மாற்றாக 5 இலவச செயலிகள்!


நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். அவர்கள் நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் உரையாட 'Zoom' என்ற வீடியோ கான்பிரன்ஸ் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில் பல பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் இந்த செயலியை பயன்படுத்த தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூம் செயலிக்கு மாற்றாக ஐந்து வீடியோ கான்பிரன்ஸ் செயலிகள் இதோ!


உங்கள் வீடியோ அழைப்புகளுக்கு உதவ, ஜூம் செயலிக்கு மாற்றாக ஐந்து இலவச செயலிகள் இங்கே.
Cisco Webex Meetings

Cisco அனைத்து நாடுகளிலும் அதன் Webex Meetings-க்கு இலவச அணுகலை வழங்குகிறது. டைம் லிமிட் இல்லாத அன்லிமிடெட் பயன்பாடு, 100 பங்கேற்பாளர்களுக்கான ஆதரவு மற்றும் குரல்-ஓவர்-இன்டர்நெட்-புரோட்டோகால் (VoIP) திறன்களுக்கு கூடுதலாக ஒரு கட்டண டயல்-இன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பெறலாம். Webex Meetings உடன் தொடங்க Cisco Webex portal-ல் sign up செய்ய வேண்டும்.

Skype Meet Now

Microsoft சமீபத்தில் ஜூம் செயலிக்கு மாற்றாக Skype Meet Now கொண்டு வந்தது. இந்த செயலி அக்கவுண்ட் தேவையில்லாமல் செயல்படுகிறது மற்றும் 50 பங்கேற்பாளர்கள் வரை இலவசமாக ஆதரிக்கிறது. நீங்கள் record calls திறன், அழைப்பை உள்ளிடுவதற்கு முன்பு blur background மற்றும் screen sharing போன்ற அம்சங்களையும் பெறுவீர்கள்.

Microsoft Teams

Microsoft Teams, தொற்றுநோய்களின் போது இலவசமாக கிடைக்கிறது. இலவச பதிப்பு ஒரு நபருக்கு 2 ஜிபி தனிப்பட்ட ஃபைல் ஸ்டோரேஜை தருகிறது. அதில் அன்லிமிடெட் chat மற்றும் search, group மற்றும் one-on-one ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு மற்றும் 10 ஜிபி குழு கோப்பு ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.

Discord

Discord-ல் அலுவலக குழு அல்லது சில நண்பர்களுடன் ஒரே நேரத்தில் 50 பங்கேற்பாளர்களுடன் இணையலாம். உங்கள் திரையைப் பகிர அல்லது குரல் அழைப்புகளைச் செய்வதற்கான அம்சங்களும் உள்ளன. Discord எந்த கட்டணமும் இல்லாமல் வீடியோ கான்பரன்சிங்கை வழங்குகிறது. உங்கள் மெய்நிகர் கான்பிரன்ஸ்களைத் தொடங்க டிஸ்கார்ட் தளத்தில் / செயலியின் மூலம் sign up செய்ய வேண்டும்.

Google Hangouts

Google Hangouts-ல் 10 பங்கேற்பாளர்களுடன் வீடியோ அழைப்புகளை செய்யலாம் அல்லது ஒரே நேரத்தில் 150 பங்கேற்பாளர்களுடன் chat செய்யலாம். மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி text messages-ன் மூலம் வீடியோ அழைப்புகளை ஹோஸ்ட் செய்ய Google உங்களை அனுமதிக்கிறது. இது Google தயாரிப்பு என்பதால், தொடங்குவதற்கு Hangouts-க்கு உங்கள் ஜிமெயில் கணக்கு தேவை.

Post a Comment

0 Comments