இந்தக் காலத்தில் நமது எல்லா முக்கிய டேட்டாவும் செல்போன்களில் தான் இருக்கிறது. இதனால் செல்போனை நாம் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால், இப்போது சைபர் தாக்குதல் மூலம் செல்போன்களை ஹேக் செய்வது அதிகரித்து வருகிறது. செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்.
செல்போன் ஹேக் ஆகும் போது அதில் என்ன மாதிரியான மாற்றம் இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது செல்போன் என்பது நமக்கு ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஷாப்பிங் முதல் வங்கி பரிவர்த்தனை வரை இப்போது நாம் எல்லாவற்றையும் செல்போன் வழியாகவே செய்கிறோம். செல்போன்: அதிலும், யுபிஐ உள்ளிட்ட வசதிகள் வந்த பிறகு செல்போனின் பயன்பாடு ரொம்ப முக்கியமானதாக மாறுகிறது. அதேபோல செல்போன் டேட்டாவும் முக்கியமானதாக இருக்கிறது. இதைத் தெரிந்து கொண்டே சைபர் குற்றவாளிகள் செல்போன்களை ஹேக் செய்கிறார்கள். சமீப காலமாகவே இதுபோன்ற ஹேக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சில குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை நாம் கண்டறியலாம்..
இந்த 5 அறிகுறிகள் உங்கள் செல்போனில் தெரிந்தால் அது ஹேக் ஆகியிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, கவனமாக இந்த அறிகுறிகளை நோட் செய்யுங்கள்.
பேட்டரி: முதலில் செல்போனின் பேட்டரியை செக் செய்யுங்கள். எப்போதும் ஹேக் செய்யப்பட்ட செல்போனில் பேட்டரி சீக்கிரம் காலியாகும். மேலும், செல்போன் கூட ஓவர் ஹீட் ஆகும். உங்கள் செல்போன் திடீரென ஓவர் சூடாக மாறினால் அல்லது பேட்டரி வேகமாக காலியானால் செல்போன் ஹேக் செய்யப்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல ஹேக் செய்யப்பட்ட செல்போனில் இணையப் பயன்பாடும் அதிகமாக இருக்கும். உங்கள் தகவல்களை இணையம் மூலமாகவே எடுப்பார்கள். எனவே, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் இணைய டேட்டாவை விட ஹேக் செய்யப்பட்ட செல்போனில் இணையப் பயன்பாடும் அதிகமாக இருக்கும்.
புதிய செயலிகள்: செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் திடீர் திடீரென புதிய செயலிகளை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்தும் செயலிகளைத் தவிர புதிய செயலிகளும் டவுன்லோட் ஆகும். மேலும், நீங்கள் ஒரு செயலியை ஓபன் செய்ய முயன்றால், அது ஓபன் ஆக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதாவது செல்போன் மெதுவாக இயங்க தொடங்கும். மேலும், உங்கள் செல்போனில் திடீரென புதிது புதிதாக நோட்டிபிக்கேஷன்கள் வரும். கேமரா, மைக் ஆகியவற்றின் செட்டிங் மாற்றப்பட்டு இருக்கும். அதாவது புதிய செயலிகள் எப்போது வேண்டுமானாலும் நமது கேமரா, மைக் ஆகியவற்றை ஆக்சஸ் செய்யும் வகையில் செட்டிங்க்ஸ் மாற்றப்பட்டு இருக்கலாம். எனவே, அதையும் கவனியுங்கள்.
ரொம்ப முக்கியம்: எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்கள் கூகுள் கணக்கு முடக்கப்பட்டு இருக்கலாம். அதாவது உங்கள் கூகுள் கணக்கின் பாஸ்வோர்ட் மாற்றப்பட்டு, தானாக லாக் அவுட் ஆகியிருக்கும். இதுதான் நீங்கள் நோட் செய்ய வேண்டிய மிக முக்கியமான எச்சரிக்கையாகும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் செல்போனில் ஆன்டி வைரஸை இன்ஸ்டால் செய்து செக் செய்யுங்கள். பெரும்பாலான ஆன்டி வைரஸ்கள் உங்கள் செல்போனில் இருக்கும் பிரச்சினையை எளிதாகக் கண்டுபிடித்துவிடும். எனவே, இதுபோன்ற அறிகுறிகளை மறக்காமல் நோட் செய்து உங்கள் செல்போனை பாதுகாத்துக் கொள்ளுங்கள். தெரியாத தேவையில்லாத லிங்குகளை க்ளிக் செய்யாமல் இருந்தாலே செல்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
0 Comments