போன் அழைப்புகளுக்கு பதிலளிக்க வெறுப்பா இருக்கா...? இனி உங்களுக்கு பதில் பிக்ஸல் போன் பதிலளிக்கும்...!


பிக்சல் போன்களில் கால் ஸ்கிரீன் என்ற அம்சம் ஏற்கனவே உள்ளது. இது உங்களுக்கு வரும் அழைப்புகளை நிர்வகிக்க உதவுகிறது.

போன் அழைப்புகளுக்கு பதிலளிக்க கூச்சப்படுபவரா நீங்கள்? அல்லது பயப்படுபவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், இனி கூகுளின் பிக்சல் (Pixel) போன்கள் அதற்கான தீர்வைத் தருகின்றன. விரைவில், "செயற்கை நுண்ணறிவு (AI) பதில்கள்" என்ற அம்சம் மேம்பட்ட மொழி மாதிரிகளை பயன்படுத்தி, உங்கள் சார்பாக உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க பிக்சல் ஃபோனை அனுமதிக்கலாம். இதிலுள்ள வசதி என்ன?, இது எப்படி வேலை செய்கிறது?, ஏன் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

செயற்கை நுண்ணறிவு (AI) பதில்கள் என்றால் என்ன?

புதிய "AI பதில்கள்" அம்சங்களைப் பெற்று, போனின் கால் ஸ்கிரீனை ஒரு படி முன் நகர்த்தியுள்ளது கூகுள் நிறுவனம். இவர்களுடைய Phone செயலியின் சமீபத்திய பீட்டா பதிப்பு, AI மூலம் இயங்கும் பதில்களை உருவாக்கி வருகிறது என்பதற்கான குறிப்புகளைக் காட்டுகிறது. இது அழைப்பாளர்களுடன் புத்திசாலித்தனமாக பேசுகிறது.

Post a Comment

0 Comments