நிறையப்பேர் தெரிந்தே செய்யும் ஒரு தவறு சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தை தொல்லை செய்யும் போது சமாளிப்பதற்காக Mobile கையில் தருவதுதான் வேறு சிலர் ஏதோ ஒரு விளையாட்டினை தொலைபேசியை போட்டுக் கொடுத்து குழந்தையை விளையாட விட்டுவிடுவதுதான் இதைச் செய்வது தவறு இதனால் குழந்தைக்கு பாதிப்பு வரலாம் என்று தெரிந்த போதிலும் பல நேரங்களில் நம்முடைய வசதிக்காக இதை கையாளுகிறோம்
சாப்பிட வைக்க, குறும்பு செய்வதைத் தடுக்க ,அடம் பிடித்ததற்காக சமாதானம் செய்ய, அடித்ததற்குச் சலுகையாக, திட்டியதற்குப் பதிலாக என பல நேரங்களில் கையூட்டாகவும் உதவுகிறது. பல வீடுகளில்,கூடவே இருக்கும் செவிலிப் பெண்ணாக Mobile ஆகிவிட்டது. இதற்கு முன்னர், இந்த இடத்தை தொலைக்காட்சி,ஆட்டமாடும் நிலையம், மற்றும் காணொளி விளையாட்டுக்கள் பிடித்திருந்தன். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் எதிர்க்கவல்ல திறமை மிகுந்த சாதனமாக வீட்டிலேயே நம்மையும் குழந்தைகளையும் பிரித்து வைத்திருக்கும் தடுப்பானாக விளங்குவது mobile தான்
குழந்தைகள் எதிர்பார்ப்பது அவர்களோடு நாம் நம் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்பதுதான் .அவர்கள் செய்யும் ஒரு செயலுக்கும், பேசும் ஒரு வார்த்தைக்கு ,நாம் ஆற்றும் எதிர்வினை தான் அவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் .உதாரணத்திற்கு ஒரு குழந்தையிடம் பந்து இருக்கிறது உங்களிடம் வீசுகிறது. நீங்கள் அதை பிடிக்கிறீர்கள்!! நன்றாக வீசினீர்கள்!! என சொல்லலாம் திருப்பி வீசி பிடி!! என்று சொல்லலாம் குழந்தை பிடிக்க முயற்சி செய்யலாம்! பிடித்தால் சந்தோஷப்படலாம்!!கை தட்டலாம் .மகிழலாம் !!இப்போது குழந்தை பந்து வீசுவதற்கு முன் உங்களை கூப்பிட்டு சொல்கிறது என்ன நினைக்கிறீர்கள்? என்பதனை பார்க்கிறது. அதன் செயலை கவனித்து செய்கிறது. அதற்குப் பின் உங்களுடைய எதிர்வினையையும் கவனிக்கத் தொடங்குகிறது.நீங்களும் வீசிய பந்தினை பிடிக்கும் போது சில வார்த்தைகளை சொல்லுகிறீர்கள். நீங்கள் பாராட்டினால் அதையும் ஏற்றுக் கொள்கிறது அதன் மூலம் குழந்தையின் நம்பிக்கை அதிகமாகிறது
இதே குழந்தை பந்தை எடுத்து உங்களிடம் வரும் போது நீங்கள் பாப்பா !பந்தா எனக்கு நேரமில்லை இந்த போனை வைச்சு பந்து விளையாட்டு பாரு, விளையாடுன்னு ன்னு சொன்னால் என்ன ஆகும்? அந்த குழந்தைபந்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து யாரோ ஒருவர் பந்துவீச இன்னொரு பந்தை பிடிக்க அந்த காணெலிவிளையாட்டை பார்த்தும் விளையாடிக் கொண்டு மட்டுமே இருக்கும் . ஆனால் அந்த விளையாட்டினை விளையாடிய ஒரு மகிழ்ச்சி, உணர்வு, அனுபவம் அந்த குழந்தைக்கு ஏற்பட்டிருக்காது
என்ன காரணத்தினால் குழந்தைகள் திறன்பேசி களுக்கும் மற்ற பொழுதுபோக்கு சாதனங்களுக்கும் அடிமைப் படுகிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்..வளரும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர( தற்போது கொரோனா காலத்தில் முழுநேரமும்) ஏதாவது பொழுது போக்கு தேவை ஒரே மாதிரி, ஒரே வேலையை, ஒரே விளையாட்டை செய்துகொண்டிருந்தால் அலுப்பு ஏற்படும் அதற்கு வேறு மாறுதலைத் தேடும். குழந்தைகள விளையாடுவதற்கும் கூட இருப்பதற்கும் நாம் நம்முடைய நேரத்தை ஒதுக்க வேண்டும் குழந்தைக்கு தேவையான ஆதரவினையும், உதவும் சூழலையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
குழந்தைகளுக்கு அலுப்பு ஏற்படுவது எப்போது? என்பதை இப்போது காண்போம் .காலையில் எழுந்தவுடன் வழக்கம்போல சிறிது நேரம் விளையாடுகிறது .சைக்கிள் ஓட்டுகிறது. வெளியே செல்கிறது புத்தகத்தை எடுத்துபுரட்டுகிறது. சிறிது நேரம் பொம்மையோடு விளையாடுகிறது அதற்குப் பிறகு என்ன செய்வது ?என்று குழம்பிக் கொண்டு விடுகிறது அந்த குழந்தை நம்மை அணுகும்போது கண்ணா! அம்மா அப்பா ரெண்டு பேரும் வே லையா இருக்கோம்.
இந்த கொஞ்ச நேரம் நீ சும்மா தொந்தரவு பண்ணாம இரு அப்படி என்று ஒரு திறன்பேசியினைக் குழந்தை கையில் கொடுத்தால் வருங்கால விளைவுகள் பற்றி எல்லாம் யோசிக்காமல் ஒரு மின்ணணு ஆயாவை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த ஆயா எல்லாம் செய்வாள்? குழந்தையைச் சிரிக்க வைக்க வேண்டுமென்றால் சுட்டிக்கதை சொல்லவார். பயப்படுத்தவேண்டுமென்றால் பேய்ப் படங்களை காண்பிப்பார். விளையாட வேண்டும் என்றால் காணொளி விளையாட்டுக்களை காண்பிப்பார். தூங்க வேண்டும் என்றால் பாட்டு பாடுவார் .என்ன வேலையை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு உதவுவார்
இந்த ஆயா சொல்வதையெல்லாம் குழந்தை கேட்க ஆரம்பிப்பதற்கு அதிக நாள் ஆகப்போவதில்லை
இதற்கு பதிலாக என்ன செய்யலாம் ?என்பதை யோசிப்போம் குழந்தைக்கு அலுப்பு ஏற்படுவதற்கான காரணம் ஒரே வேலையைச் செய்வதுதான். அதற்குப் பதிலாக வேறு என்னென்ன செயல்களை குழந்தைகள் செய்ய வைக்கலாம் அவர்களுடைய மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பதை யோசிக்க வேண்டும் .ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதோஒன்று பிடிக்கும். சில குழந்தைகளுக்கு படம் வரைய பிடிக்கும். சில குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கும் சில குழந்தைகள் மண்ணைக் கரைத்து விளையாடும் .சில குழந்தைகள் செடிகளோடு உறவாடும். சில குழந்தைகள் மணலில் விளையாடும். சிலர் பொம்மையோடு உட்கார்ந்து விடுவார்கள். சிலருக்கு பெரியவர்களோடு மட்டுமே பேசுவார்கள் கதைப்பார்கள் அவர்களுக்கு பிடித்த விருப்பத்தைப் பொறுத்து அனுமதி வழங்க வேண்டியது , நம்முடைய கடமை .
எனவே குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் நீங்கள் அமர்த்தும் உதவியாளராக இருந்தாலும் அல்லது உங்களுடைய குடும்பத்தினர் தாத்தா-பாட்டி என யாராக இருந்தாலும் குழந்தைகளின் விருப்பத்தினைக்கண்டு பிடிக்கவேண்டும். அதற்கேற்ப குழந்தையை முழு நேரமும் சுறுசுறுப்பாகவும் ஏதோ ஒரு செயலில் பிடித்த முறையில் ஈடுபடுத்துதல் வேண்டும்
2. பிடித்ததை புகுத்த வேண்டும்
குழந்தை சற்று பெரியவனாக இரு ப்பின் உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் இருக்கிறது? என்பதை கவனியுங்கள் ஆர்வம் உள்ள நுண்கலைகள்(நடனம் பாட ல் ) , விளையாட்டு(நீச்சல் பயிற்சி கபடி கிரிக்கெட் கால்பந்து) இசைக்கரூவிப் பயிற்சிகள்,(வயலின் மிருதங்கம் ) தோட்டம் ,செடி வளர்ப்பு, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு ,சமூக சேவை,பேச்சுப்போட்டி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில்் கலந்து கொள்ளுதல் என எதில் ஆர்வம் இருந்தாலும் அதற்கான வகுப்புகள் உலகெங்கும் நடத்தப்பட்டு வருகின்றது தற்போதைய காலத்தில் ஆன்லைனில் அனைத்து வகுப்புகளும் நடக்கின்றன இதில் கலந்து கொள்வதற்கு குழந்தைகளுக்கு நாம் வாய்ப்பு தரலாம். குழந்தைகள் அதில் மூழ்கி விட்டால் தங்கள் மனத்தை செலுத்தி விட்டால் திறன்பேசியைை ப் பற்றி யோசிக்க கூட நேரம் இருக்காது
03 குழந்தைகளுடன் நீங்கள் செலவிடும் நேரம் முக்கியம் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் குழந்தைகளை வந்தவுடன் ஹோம்வொர்க் செய்!! டியூஷனுக்கு போ!! ஹிந்தி கிளாசுக்கு போ!!!! எனத் தொந்தரவு செய்யக்கூடாது. கை கால் முகம் கழுவிய பின் ஏதாவது வீட்டில் செய்யும் சிற்றுண்டி தர வேண்டும் .பிறகு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் குழந்தையை விளையாட விடலாம் வீட்டிலேயே விளையாட விடலாம் .ஸ்கிப்பிங் , பந்து வீசுதல், பிடித்தல் முதலிய விளையாட்டுக்கள் உதவிகரமாக இருக்கும் . யோகாசனப் பயிற்சிகள், நாமும் அவர்களோடு சேர்ந்து நடனம் கூட ஆடலாம் .வீட்டு மாடியில் உள்ள தோட்டங்களில் செடிகள் வளர்ப்பு ஆகியவைகளுக்கு உதவி செய்யச் சொல்லலாம்
சமையலறையில் பெற்றோர்களுக்கு உதவி செய்தல் ,வீட்டை சுத்தமாக வைத்திருத்தல், அடுத்த வேளை உணவுக்கு காய்கறிகளை அறுத்து உதவி செய்தல் எனபலதரப்பட்ட விஷயங்களைச் சொல்லித் தரவேண்டும்
குறிப்பிட்ட நேரம் கழிந்த பின்னர் அவர்கள் படிக்கும்போது படிப்பதற்கு உதவியாக நாமும் இருக்கவேண்டும். கேள்விகளைக் கேட்கும்போது மட்டும் உதவி செய்யலாம். என்னேரமும் கூடவே இருந்து என்ன படித்தாய்? என தொந்தரவு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு படித்து முடித்து விட்டால் பாராட்ட வேண்டும் படிக்கும்போது உற்சாக படுத்துவதற்காக பழங்கள் அல்லது வீட்டில் செய்யும் உணவு வகைகளை தரலாம்,காப்பி, டீ, ஊக்க பானங்கள் தவிர்க்கவும்
4 நமது வீட்டுச் சூழல் மிக முக்கியம்
வீட்டில் 24 மணி நேரமும் தொலைக்காட்சியும் சாப்பிடும்போதும் மற்ற நேரங்களிலும் ஒவ்வொருவரும் அவர்களுடைய திறன் பேசியை கையில் வைத்து நோண்டிக் கொண்டே இருந்தால் அந்தப் பழக்கம்தான் பதிந்துவிடும் .பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் இதிக கவனம் செலுத்த வேண்டும். பள்ளியில் இருந்து குழந்தை வந்தவுடன் பள்ளியில் நடந்த விஷயங்களை கேட்க வேண்டும். குழந்தை தன் வீட்டினரின் உண்மையான அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் .எனவே வந்தவுடன், கண்ணா பள்ளி எப்படி இருந்தது? நல்லா போச்சா ?பள்ளிக்கூடத்தில் ஏதாவது விஷயங்கள் நடந்ததா ?என கேட்கலாம். பெற்றோர்கள் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் முக்கியமான விஷயங்களைப் பற்றி கலந்துரையாடலாம்.
பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தை வந்தவுடன் தொலைக்காட்சியையும் திறன் பேசியையும் திணிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தையோடு அதிக நேரம் செலவு செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும் .தேவையில்லாத வகுப்புகளுக்கு குழந்தை அனுப்புவதை தவிர்த்தல் நல்லது. வீட்டில் குழந்தை இருக்கும் நேரங்களில் மகிழ்ச்சியான, நல்ல விஷயங்களையும் பேச வேண்டும் குடும்ப விஷயங்களைப் பற்றி குழந்தையிடம் பேசலாம் இரவு நேரத்தில் அனைவரும் இணைந்து ஒன்றாக சாப்பிடுவது நல்லது வீடுகளில் அவரவர் சமயம் மதங்களுக்கு ஏற்ப விழாக்களை கொண்டாடுவது , அதில் குழந்தைகளை இணைத்துக்கொள்வது பாடல்கள் பாடச் சொல்லுவது, பண்பாடு கலாச்சாரத்தை பற்றி அவ்வப்போது தேவைப்படும் போது எடுத்து சொல்வது ,ஆகியவை நம் குடும்ப பழக்கத்தினை குழந்தைகளுக்கும் பழகிவிடும். நாம் உண்ணும் உணவு ,உடுக்கும் உடை, இருக்கும் இடம் ,நடக்கும் விதம் ஆகியவை நம்முடைய கலாச்சாரம் பண்பாடு பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தரும் .குழந்தைகள் செய்யும் விஷயங்களில் ஏதாவது நமக்கு மனதிற்கு பிடிக்காமல் இருந்தால் எடுத்தவுடன் அது தவறு என்று சொல்லாமல் உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்பதனை பொறுமையாகச் சொல்லலாம் . குழந்தையின் செயல்களில் எது மவறு?ஏன் அந்த முடிவை எடுத்தது ?என்பதனையும் பேசி அறிந்து விடலாம் ஒவ்வொரு முறையும் நாம் தான் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை .குழந்தை சொல்வதும் செய்வதும் சரியாக இருந்தால் நாம் சொல்வது தவறு என்பதை ஒப்புக் கொள்வும். இது பெரியவர்கள் ஆன பின்னரும் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் .குழந்தையோடு நாம் செலவு செய்யும் நேரமே அவர்களுடைய எதிர்காலத்திற்கான அடித்தளமான விஷயம் ஆகும் எனவே உங்கள் குழந்தையை திறன்பேசி தொலைக்காட்சி அடிமைத்தனத்திலிருந்து வர வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் வீட்டில் இருக்கும் நேரங்களில் இதுவரை சொன்ன பழக்கங்களை நீங்கள் கடைபிடிக்கவேண்டும் .உங்களைப் பார்த்து குழந்தைகள் கற்றுக் கொள்ளும்
0 Comments