ChatGPT vs Deepseek.. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? இரண்டில் ஏது பெஸ்ட்! சர்ப்ரைஸ் முடிவுகள்.


சீனா இப்போது வெளியிட்டுள்ள டீப்சீக் ஏஐ மாடல் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே டீப்சீக் vs சாட் ஜிபிடி இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன! வேறுபாடுகள் என்ன! இரண்டில் எதை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாக பார்க்காலம். சீனாவின் டீப்சீக் ஏஐ உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. ரிலீசான முதல் நாளே ஹிட் அடித்துள்ள டீப்சீக், உலகெங்கும் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாக இருக்கிறது.
அதேநேரம் பலருக்கும் சாட்ஜிபிடிக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து தெரிவதில்லை. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.. இரண்டில் எது பெஸ்ட் என்பது குறித்து நாம் பார்க்காலம்.

இரு ஏஐ மாடல்கள்
அமெரிக்காவை சேர்ந்த சாட்ஜிபிடியும் சரி, சீனாவை சேர்ந்த டீப்சீக் ஆர் 1 மாடலும் சரி இரண்டுமே எல்எல்எம் (LLM) எனப்படும் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் மூலம் இயங்கும் ஏஐ அமைப்புகளாகும். இவை நாம் அனுப்பும் சாட்களை மனிதர்களை போல புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும். இவை சாதாராண கட்டுரை எழுதுவது, ஆராய்ச்சி, கோடிங் என பல்வேறு பணிகளுக்கும் நமக்கு உதவுகிறது. சாட்ஜிபிடியை போலவே டீப்சீக் ஏஐ மாடலையும் நாம் செயலியாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம், நேரடியாக வெப்சைட்டிலும் பயன்படுத்தலாம். தற்போது அதிகளவில் டவுன்லோட் செய்யப்படும் ஏஐ மாடலாக இந்த டீப் சீக் உள்ளது.

எப்படி தொடங்கியது:
தென்கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கடந்த 2023ம் ஆண்டு டீப்சீக் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதுதான் இப்போது டீப்சீக் ஆர் 1 என்ற ஐஏ மாடலை வெளியிட்டுள்ளது. லியாங் வென்ஃபெங்கால் என்பவர் இந்த நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். மறுபுறம் சாட்ஜிபிடி என்பது அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ஒரு மாடலாகும். இந்க ஓபன் ஏஐ நிறுவத்தின் தலைவராக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி சாட் ஜிபிடி முதலில் வெளியிடப்பட்டது. அப்போது முதலே இதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

செலவு ரொம்பவே குறைவு:
சாட்ஜிபிடியை காட்டிலும் டீப்சீக் மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டது. அதை ஆப்ரேட் செய்யவும் குறைந்தளவே செலவாகும் என்பதே அதன் முக்கிய சிறப்பம்சம் ஆகும். சாட்ஜிபிடி அதன் ஒவ்வொரு வெர்ஷனுக்கும் பல கோடி டாலர் செலவிட்டு பயிற்சி அளித்துள்ளது. ஆனால், டீப்சீக் மாடல் வெறும் 5.5 மில்லின் டாலரில் இதை முடித்துவிட்டது. இதை இயக்க ஆகும் செலவும் கூட ரொம்பவே குறைவு.. சாட் ஜிபிடியை நாம் இயக்கும் போது 10 லட்சம் இன்புட் டோக்கன்களுக்கு சுமார் 15 டாலர் செலவாகும். அதேநேரம் டீப்சீக் மாடலில் 10 லட்சம் இன்புட் டோக்கன்களுக்கு வெறும் $0.55 மட்டுமே செலவாகும். அதாவது சாட்ஜிபியை காட்டிலும் 27 மடங்கு குறைந்த செலவில் டீப்சீக் மாடல் இயங்குகிறது. சாட்ஜிபிடி மற்றும் டீப்சீக் என இரண்டுமே இலவசமாக கிடைக்கிறது. ஆனால், சாட்ஜிபிடியில் நாம் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். புதிய வெர்ஷன்களை பயன்டுத்த அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டீப்சீக் மாடலை பொறுத்தவரை தற்போது அனைத்துமே இலவசமாக இறுக்கிறது.


டீப்சீக்
நாம் நடத்திய சோதனையில் பைதான், ஜாவா உள்ளிட்ட கோடிங்குகளை உருவாக்குவதில் டீப்சீக் சிறந்து விளங்குகிறது. அதேநேரம் சீனாவின் தணிக்கை காரணமாக பல விஷயங்களை அது தெளிவாக குறிப்பிடுவதில்லை.


சாட்ஜிபிடி
மறுபுறம் சாட்ஜிபிடியை பொறுத்தவரை கதை சொல்வது, ஜோக் சொல்வது என க்ரியேடிவ் பிரிவில் வேற வெலவில் இருக்கிறது. இதில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் இது பல முக்கிய கருத்துகளை கூறுகிறது. அதேநேரம் சில நேரங்களில் சூழலுக்கு ஏற்ற பதில்களை தர சிரமப்படுகிறது. மேலும், இதில் சில இடங்களில் பக்கச்சார்பும் தெரிகிறது..


எது பெஸ்ட்:
நாம் பயன்படுத்தியதை வைத்து பார்க்கும் போது கணிதம், லாஜிக்கல் கேள்விகள், கோடிங் ஆகியவற்றுக்கு டீப்சீக் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக டெக்னிக்கல் கேள்விகளுக்கு துல்லியமான பதிலை அளிக்கிறது. மறுபுறம் படைப்பாற்றல் மற்றும் உரையாடுவது போல இருக்க வேண்டும் என்றால் சாட்ஜிபிடியே சிறந்தது. அதில் தற்போது வரை நடந்த அனைத்து தகவல்களும் அப்டேட் ஆக இருக்கிறது.




Post a Comment

0 Comments