டீப்சீக்கை விடுங்க.. சீனா இறக்கிய அடுத்த ஏஐ.. எங்க போய் முடியுமோ தெரியல.. ஸ்டன் ஆன டெக் உலகம்!



பீஜிங்:
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் நிறுவனம் சக்தி வாய்ந்த ஏஐ - மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. டீப் ஃபேக் வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்ட இந்த ஏஐ, பிற ஏஐ மாடல்களை போல நுற்றுக்கணக்கான இமேஜ்களை கொண்டு உருவாக்காமல் ஒரே ஒரு இமேஜை வைத்து துல்லியமான ஏஐ வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக் உலகில் இது புது பாய்ச்சலை உருவாக்கும் என்று சொல்லப்பட்டாலும் முறைகேடாக பயன்படுத்தும் அச்சுறுத்தலும் அதிகரித்து இருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க டிஜிட்டல் பயன்பாடு மற்றும் அதன் டெக்னாலஜி வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கூகுள் செய்யும் பழக்கம் நாளடைவில் வழக்கொழிந்து விடும் என சொல்லும் அளவுக்கு ஏஐ டெக்னாலாஜியின் வேகம் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில மாதங்களில் ஏஐ வேகமாக வளர தொடங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் உடன் இணைந்து வெளியான சாட் ஜிபிடி டெக் உலகை உலுக்கி போட்டது. சாட் ஜிபிடியின் அசுரத்தனமான வளர்ச்சியால் கலங்கி போன சிலிகான் வாலி நிறுவனங்கள் உடனடியாக ஏஐ- களை உருவாக்க தொடங்கின. அதன் தொடர்ச்சியாக தற்போது, கூகுளின் ஜெமினி, மெடா நிறுவனத்தின் ஏஐ, எக்ஸ் தளத்தின் க்ரோக் ஆகியவையும் ஏஐ - தொழில் நுட்பத்தில் போட்டி போட தொடங்கியுள்ளன. எனினும் சாட்ஜிபிடி காட்டும் துல்லியம், வேகம் ஆகியவற்றால் ஏஐயில் தனி ஆதிக்கம் செலுத்தியது.

நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் எளிதாக பதில் அளிக்கும். அல்காரிதம் அடிப்படையில் இன்றி இது மெய்நிகர் சிந்திக்கும் திறன் கொண்டது. குறிப்பிட்ட எல்லை வரை சுயமாக சிந்தித்து இது பதில்களை வழங்கும். உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கும் சாட் ஜிபிடியின் சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்தது எதுவென்றால் சீனாவின் டீப் சீக் என்ற ஏஐ தான். தென்கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப் சீக் முற்றிலும் இலவச செயலி என்பதால், சாட் ஜிபிடியை இது பின்னுக்கு தள்ளி அதன் இடத்தை பிடித்தது.

டீப்சீக் வெளியாகி அமெரிக்க டெக் நிறுவனங்களை ஆட்டம் காட்டிய நிலையில், தற்போது பவர்புல் ஏஐ மாடல் ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது. OmniHuman- என்ற மேம்பட்ட ஏஐ - யை டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்டேன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஏஐ டீப்ஃபேக் வீடியோக்களை ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து உருவாக்க கூடியதாகும். ஏஐ தொழில் நுட்பத்தில் புதிய பாய்ச்சலை இது ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டாலும் கூட பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது டீப்ஃபேக் டெக்னாலஜியை வைத்து தவறாக பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது. ஏனெனில், ஒரே ஒரு போட்டோவைக் கொண்டு ஒருவரின் முழு உருவத்தை அப்படியே உருவாக்கும் திறன் கொண்டது இந்த OmniHuman 1 என்று சொல்லப்படுகிறது. இதற்கு முந்தைய ஏஐ மாடல்கள் டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்க ஆயிரக்கணக்கான இமேஜ்கள் தேவைப்பட்டன. ஆனால் பைட்டேன்ஸ் நிறுவனத்தின் ஏஐ மாடல் ஒரே ஒரு புகைப்படத்தை வைத்தே நம்ப முடியாத அளவுக்கு ரிசல்ட் கொடுப்பதால் இது தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தொழில் நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

Link Ai Website   :  Ai Best Link 

Post a Comment

0 Comments