Video வெயிட்டிங் ஓவர்.. கம்மி பட்ஜெட்ல சோனி கேமரா.. 5160mAh பேட்டரி.. புதிய Poco 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?


போக்கோ (Poco) நிறுவனம் தனது புதிய போக்கோ எம்7 5ஜி (Poco M7 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் மார்ச் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். போக்கோ எம்7 5ஜி அம்சங்கள் (Poco M7 5G specifications): 6.88-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் மேலும் இதன் டிஸ்பிளேல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. "வெளுக்குது விற்பனை.. ரூ.21499 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?" அதேபோல் டியூவி ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Blue light) பெற்றுள்ளது இந்த அசத்தலான போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன். மேலும்IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். 50எம்பி சோனி (Sony) பிரைமரி கேமரா + டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. 5160mAh பேட்டரி உடன் போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சாடின் பிளாக் (Satin Black), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் ஓஷன் ப்ளூ (Ocean Blue) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.



"யாரு விடுவா.. கம்மி பட்ஜெட்ல 30 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கு Airtel திட்டங்கள்.."  தரமான குவால்காம் ஸ்னாப்டிரான் 4 ஜென் 2 சிப்செட் (Side-mounted Fingerprint Scanner) உடன் போக்கோ எம்7 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இரண்டு வருடங்களுக்கு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். 6ஜிபி ரேம் + 6ஜிபி விர்ச்சுல் ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ எம்7 5ஜி ஸ்மார்டபோன். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளயான தகவலின்படி ரூ.10,000-க்கு கீழ் இந்த புதிய போக்கோ எம்7 5ஜி போன் அறிமுகமாகும்.

Post a Comment

0 Comments