உலகம் முழுவதும் ஜிமெயில் (Gmail) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது ஆதார் முதல் வங்கி சேவை வரை இந்த ஜிமெயில் கட்டாயம் தேவைப்படுகிறது. குறிப்பாக இந்த ஜிமெயில் சேவையில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது கூகுள் (Google) நிறுவனம். குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஜிமெயில் சேவையில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தைச் சேர்க்க முடிவு செய்துள்ளது கூகுள். அதாவது இந்த ஜிமெயில் பயன்படுத்தும் பயனர்களுக்கு தங்களது கணக்கை பாதுகாப்பாக லாகின் செய்ய Two Factor Authentication முறையை கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. அதுவும் இந்த முறையில் பயனர்கள் தங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்த பின்பு SMS மூலம் வரும் ஆறு இலக்க குறியீட்டை உள்ளிடுவது மூலம் கணக்கை லாகின் செய்ய முடியும். "Google போட்ட புது ரூல்ஸ்.. Gmail சேவையில் புதிய மாற்றம்..
இனி உள்ள போறது அவ்ளோ ஈஸி இல்ல!" குறிப்பாக இந்த முறை பாதுகாப்பானதாக இருந்தாலும் சில சமயங்களில் ஹேக்கர்கள் எஸ்எம்எஸ் சரிபார்ப்பு குறியீட்டை இடைமறித்து கணக்குகளை ஹேக் செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் இந்த எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பு குறியீடு அனுப்புவது கூகுள் நிறுவனத்திற்குக் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த காரணங்களால் கூகுள் நிறுவனம் எஸ்எம்எஸ் அடிப்படையிலான சரிபார்ப்பு குறியீட்டை நீக்க முடிவு செய்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் இந்த எஸ்எம்எஸ் சரிபார்ப்பு குறியீட்டிற்குப் பதிலாக க்யூ ஆர் கோட் (QR code) அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த க்யூ ஆர் கோட் முறை எப்படி செயல்படும் என்பதைப் பார்க்கலாம். அதாவது பயனர்கள் ஜிமெயில் லாகின் பக்கத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்த பின்பு, க்யூ ஆர் கோட் ஒன்று திரையில் தோன்றும். அடுத்து பயனர்கள் தங்கள் மொபைல் போனில் இருக்கும் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்தி அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் கணக்கை எளிமையாக லாகின் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. "உங்கள் SBI கணக்கில் இருந்து திடீரென ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டதா? ஏன் தெரியுமா? இதுதான் காரணம்.." குறிப்பாக எஸ்எம்எஸ் முறையை விட இந்த க்யூ ஆர் கோட் அம்சம் மிகவும் பாதுகாப்பானது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது இந்த க்யூ ஆர் கோட் முறையில் சரிபார்ப்பு குறியீடு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட மாட்டாது. எனவே இதனால் ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டை இடைமறிப்பது மிகவும் கடினம். பின்பு இந்த க்யூ ஆர் கோட் முறை கூகுள் நிறுவனத்திற்கு அதிக செலவும் கொடுக்காது. இதுதவிர ஜிமெயில் பயனர்களுக்குப் பண பரிவர்த்தனை சேவையை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சேவை மட்டும் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டால் ஜிமெயில் பயனர்கள் தங்களது மின்னஞ்சல் மூலம் எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். பின்பு இந்த QR Code அடிப்படையிலான அங்கீகார முறை பணப் பரிவர்த்தனை சேவையைப் பாதுகாப்பாக வழங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. "அதிரவிடும் விலை.. வருகிறது புதிய Google பிக்சல் போன்.. OLED டிஸ்பிளே.. 48எம்பி கேமரா.. எந்த மாடல்?" ஜிமெயில் பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யவும், பின்பு சிறந்த சேவையை மேம்படுத்தவும் விரைவில் இந்த புதிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜிமெயில் சேவையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பல பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments